பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தவறான தகவல்
கால்நடை பராமரிப்பு துறையில் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக தவறான தகவல் தென்காசி கலெக்டர் ஆகாஷ் தகவல்
தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஒரு செயலி மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறையில், மிருகம் கையாள்பவர், மிருகம் கையாள்பவர்- டிரைவர் ஆகிய பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு மூலம் எடுக்கப்படுவதாகவும் சம்பளம் முறையே ரூ.15,000 மற்றும் ரூ.18,000 எனவும், தகுதி மற்றும் வயது ஆகியவை நிர்ணயிக்கப்பட்டு 90 மணி நேரம் பயிற்சி அளித்து பணி நியமன ஆணை வழங்கப்படும் எனவும், இதற்கான ஆணை ஜூன் முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் வெளியிடப்படும் எனவும், விருப்பமுள்ளவர்கள் பதிவு செய்திடுமாறும், இந்த பணியிடங்களுக்கு தலா 160 பணியிடங்கள் (ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 பணியிடங்கள் வீதம்) எனவும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செயலி மூலம் பகிரப்படும் தகவல்கள் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறைக்கு தொடர்பற்றவை எனவும், தவறான தகவல்கள் பகிரப்படுகின்றன என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.