தட்டார்மடம்வைரவம் ஞானாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேம்


தட்டார்மடம்வைரவம்  ஞானாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேம்
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம்வைரவம் ஞானாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் வைரவம் ஞானாதீஸ்வரர் சமேத சிவகாமி அம்பாள் கோவிலில் 12ஆண்டுகளுக்கு பிறகு மகாகும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி தொடங்கியது. முதல் நாள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், லட்சுமி ஹோமம், பூஜை, முதல் யாகசாலை பூஜை, 2-ஆம் நாள் யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து வந்தது. நேற்று காலை 4,30 மணிக்கு 8-ஆம் காலயாகசாலை பூஜை, 7.30மணிக்கு சுவாமி அம்மாள், விமான கும்பாபிஷேகம், தொடர்ந்து மூலவர், அம்பாள் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் மகாகும்பாபிஷேகம் நடந்தது. காலை 10மணிக்கு மகா அபிஷேகமும், பகல் 12மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7மணிக்கு பிரம்மோத்ஸவ திருவிழா, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்கர்கள் கலந்து கொணடு தரிசனம் செய்தனர்.


Next Story