தாயுமானசுவாமி ரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி


தாயுமானசுவாமி ரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி
x

தாயுமானசுவாமி ரத்தினாவதிக்கு சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி இன்று நடக்கிறது

திருச்சி

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து தினமும் இரவு சுவாமி, அம்பாள் ஒவ்வொரு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். விழாவின் 5-ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் சிவ பக்தியில் சிறந்த செட்டிப்பெண் ரத்தினாவதிக்கு அவளது பேறுகாலத்தில் சுவாமி தாயாக வந்து சுகப்பிரசவம் பார்த்த ஐதீக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. குழந்தையை தொட்டிலில் இடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து மாலையில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி 63 நாயன்மார்கள் எழுந்தருளச் செய்து ரத்தினாவதிக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி தெரு அடச்சான் விழாவாகச் கொண்டாடப்படுகிறது. 6-ம் நாளான நாளை ( ஞாயிற்றுக்கிழமை) அம்மன் காலையில் நந்தவனத் திருக்குளத்தில் எழுந்தருளி தவசு பூஜை செய்தல், பின்னர் திருக்கல்யாண உற்சவத்திற்கு மாலை மாற்றுதல் வைபவம் நடைபெறுகிறது. பிறகு நூற்றுக்கால் மண்டபத்தில் திருநாண் பூட்டுதல் திருக்கல்யாண உற்சவம் காலை 10.30 மணிக்கு மேல் 12 மணிக்குள் கடக லக்னத்தில் நடைபெற உள்ளது. அதுசமயம் திருமாங்கல்ய பிரசாதம், சந்தனம், கற்கண்டு, தாலிசரடு ஆகியவை சுமங்கலி பெண்களுக்கு வழங்கப்படுகிறது. அதன்பிறகு பருப்பு வடை, பாயாசம், அன்னம் பாலித்து விருந்தினர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. மாலையில் யானை வாகனம் மற்றும் பல்லக்கில் சுவாமி அம்மன் காட்சிக் கொடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.


Next Story