திருச்சியில் கொள்ளிடம் வெள்ளத்தில் இடிந்து விழுந்த பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றுக்குள் சரிந்து மூழ்கியது


திருச்சியில் கொள்ளிடம் வெள்ளத்தில் இடிந்து விழுந்த பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றுக்குள் சரிந்து மூழ்கியது
x

திருச்சியில் கொள்ளிடம் வெள்ளத்தில் இடிந்து விழுந்த பழைய பாலத்தின் 17-வது தூண் ஆற்றுக்குள் சரிந்து மூழ்கியது.

திருச்சி,

திருச்சி திருவானைக்காவல் - நம்பர் 1 டோல்கேட்டை இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ம் ஆண்டு 12.5 மீட்டர் அகலம், 792 மீட்டர் நீளத்தில் 24 தூண்களுடன் பாலம் கட்டப்பட்டது. 2007-ம் ஆண்டு இந்த பாலம் வலுவிழந்ததால், இதில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. மேலும் அதன் அருகிலேயே ரூ.88 கோடியில் புதிய பாலம் கட்டப்பட்டு, 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கொள்ளிடத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போது பழைய பாலத்தின் 18, 19-வது தூண்கள் இடிந்து விழுந்தன. இதைத்தொடர்ந்து பழைய பாலத்தை இடித்து அகற்ற ரூ.3.10 கோடிக்கு அரசு டெண்டர் விட்டது.

இந்நிலையில் கொள்ளிடத்தில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்று மதியம் பழைய பாலத்தின் 17-வது தூண் மற்றும் அதில் இருந்த பாலம் முற்றிலுமாக இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கியது.

பழைய பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கும் முன்பே, வெள்ளப்பெருக்கு காரணமாக ஒவ்வொரு தூணாக இடிந்து விழுந்து வருகிறது.


Next Story