சென்னையில் 3-வது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது


சென்னையில் 3-வது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது
x

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி சென்னையில் 3-வது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 28-ந்தேதி நடைபெறுகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;-

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, சென்னை மாவட்டத்தின் 3-வது தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வரும் 28-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அமைந்துள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் 150-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 15 ஆயிரத்துக்கும் அதிகமான காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றன. 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தேர்ச்சி பெற்றவர்கள், பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ முடித்தவர்கள் என அனைத்து தகுதி உள்ளவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம்.

மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி எண்ணுக்கோ, pjpsanthome@gmail.com என்ற இ-மெயில் முகவரி வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story