தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும்


தேங்கிய மழை நீரை அகற்ற வேண்டும்
x

சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

சத்துவாச்சாரி சர்வீஸ் சாலையில் உள்ள முதல் சுரங்கப்பாதையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் சிரமத்துடன் சென்று வருகின்றனர். மேலும் தேங்கிய மழைநீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story