25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது


25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
x

வழிப்பறி, கொள்ளை வழக்கில் 25 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளியை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டருக்கு பாராட்டு.

திருப்பத்தூர்

வாணியம்பாடியை அடுத்த அம்பலூர் போலீஸ் நிலையத்தில் 1997-ம் ஆண்டு ராஜா என்பவர் மீது வழிப்பறி, கொள்ளை வழக்கு உள்ளது. இந்த வழக்கில் அவர் கோர்ட்டில் ஆஜராகாமல் 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவரை அம்பலூர் போலீஸ் நிலைய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் சிறப்பாக செயல்பட்டு அவரை கண்டுபிடித்து கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி பிடிவாரண்டை நிறைவேற்றியுள்ளார்.

சிறப்பாக செயல்பட்ட சப்- இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷணன் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.


Next Story