அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பியது
அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பியதை தொடர்ந்து பொதுமக்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை
ஆரணி
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையின் காரணமாகவும், செண்பகத்தோப்பு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதை ஒட்டி ஆற்றில் வெள்ளம் புரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக ஆரணி கமண்டல நாக நதி ஆற்றின் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் குன்னத்தூர் ஆற்றுப்பகுதியில் இருந்து உபரி நீர் கால்வாய் வழியாக குன்னத்தூர் ஏரி நிறைந்து,ஓட்டேரி ஏரியும் நிறைந்து அதிலிருந்து வரும் தண்ணீர் மூலம் அக்ராபாளையம் பெரிய ஏரிக்கு தண்ணீர் வரத்து இருந்து வந்தது.
தற்போது அக்ராபாளையம் பெரிய ஏரி நிரம்பியது. இதையடுத்து அடையபலம், மெய்யூர், இரும்பேடு உள்ளிட்ட ஏரிகளுக்கும் செல்லும் வகையில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனையொட்டி கிராம பொதுமக்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் அக்ராபாளையம் பெரிய ஏரியில் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story