அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது


அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 18 March 2023 12:15 AM IST (Updated: 18 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குன்னூர் அருகே அட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது.

நீலகிரி

ஊட்டி,

குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பில்லிமலை குடியிருப்பில் இரவில் புகுந்த கரடி, வீட்டின் கதவை உடைக்க முயற்சித்தது. இதையடுத்து அந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்ைக விடுத்தனர். தொடர்ந்து குன்னூர் வனச்சரகர் சசிகுமார் உத்தரவின் பேரில், கரடியை பிடிக்க அப்பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் கரடி நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் கூண்டில் கரடி சிக்கியது. தகவல் அறிந்த வனத்துறையினர் கரடியை கூண்டுடன் வாகனத்தில் ஏற்றி, முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது.


Next Story