கோட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு
கோட்ட பொறியாளர் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது
திருவாரூர்
திருவாரூரில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் கடந்த 14-ந் தேதி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சித்ரா, அருண் பிரசாத் மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில், கணக்கில் வராத ரூ.75 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கோட்ட பொறியாளர் இளவழுதி, உதவி கோட்டப் பொறியாளர் மாரிமுத்து, இளநிலை பொறியாளர் குமாரசெல்வன் ஆகிய 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த பணம் குறித்து எவ்வித ஆவணங்களும் சமர்ப்பிக்கப்படாத நிலையில், ஒப்பந்ததாரர்கள் லஞ்சமாக கொடுத்த பணமா? என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story