கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கள்ளிமேடு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கள்ளிமேடு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தலைஞாயிறு ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமை தாங்கினார். தலைஞாயிறு ஒன்றிய தி.மு.க. செயலாளர் மகாகுமார் முன்னிலை வகித்தார்.தலைஞாயிறு வட்டார மருத்துவர் தியாகராஜன் மற்றும் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு 650 பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கள்ளிமேடு ஊராட்சி மன்ற தலைவர்குணசேகரன், தாமரைப்புலம் ஊராட்சி மன்ற தலைவர் அமுதா பாலசுந்தரம், நீர்முளை ஒன்றியக்குழு உறுப்பினர் செல்வி சேவியர் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story