கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடந்தது.
திட்டச்சேரி:
திருமருகல் அருகே ஆலத்தூர் ஊராட்சி அருள்மொழித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் வட்டார அளவிலான கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார்.வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் வரவேற்றார். முகாமில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு, மகப்பேறு, தோல்நோய் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. நாகை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. .சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும் செய்யப்பட்டன. காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த முகாம் மாலை 4 மணி வரை நடந்தது.முகாமில் ஆலத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.இதில் கணபதிபுரம் டாக்டர் மணிசுந்தரம் மற்றும் டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருந்தாளுநர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.முடிவில் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.