டெம்போவை கடத்தி பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகள்


டெம்போவை கடத்தி பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகள்
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்த்தாண்டத்தில் தனியார் பால் நிறுவன ஊழியர்களை தாக்கி டெம்போவை கடத்திச்சென்று பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மார்த்தாண்டத்தில் தனியார் பால் நிறுவன ஊழியர்களை தாக்கி டெம்போவை கடத்திச்சென்று பணத்தை கொள்ளையடித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஊழியர்களை தாக்கிய ஆசாமிகள்

தக்கலை அருகே உள்ள செட்டிச்சார்விளையை சேர்ந்தவர் மரியஅற்புதம் (வயது52). இவர் முளகுமூடு பகுதியில் உள்ள ஒரு தனியார் பால் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை மரிய அற்புதமும், பால் நிறுவன விற்பனை பிரதிநிதியான ஸ்டாலின் என்பவரும் மார்த்தாண்டம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு கடையில் பால் பாக்கெட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தனர்.

அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென ஒரு கட்டையால் மரியஅற்புதத்தையும், ஸ்டாலினையும் தாக்கினர். இதில் காயமடைந்த அவர்கள் இருவரும் பால் ஏற்றிசெல்லும் டெம்போவை எடுத்துக்கொண்டு மார்த்தாண்டம் போலீஸ்நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

மார்த்தாண்டம் காந்தி மைதானம் பகுதியில் சென்றபோது, அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்து தகாத வார்த்தைகளால் பேசி மீண்டும் அவர்களை தாக்கி டெம்போவில் இருந்து வெளியே தள்ளினர். பின்னர், அந்த நபர்கள் டெம்போவை கடத்திச் சென்றனர்.

ரூ.12 ஆயிரம் கொள்ளை

இதையடுத்து மரியஅற்புதமும், ஸ்டாலினும் அவர்களை விரட்டிச் சென்றனர். அப்போது, அந்த மர்ம நபர்கள் வெட்டுமணி பகுதியில் டெம்போவை சாலையோரமாக நிறுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

அதைத்தொடர்ந்து மரிய அற்புதமும், ஸ்டாலினும் ெடம்போவில் ஏறி பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பால் விற்பனை செய்த ரூ.12 ஆயிரத்து 600 மாயமாகி இருந்தது. மர்ம நபர்கள் டெம்போவை கடத்தி பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மரியஅற்புதம் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் மார்த்தாண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து பால் நிறுவன ஊழியர்களை தாக்கி டெம்போவில் இருந்த பணத்ைத எடுத்துச்சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story