ரேஷன் கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மர்மநபர்கள்


ரேஷன் கடை ஊழியரை கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற மர்மநபர்கள்
x

ரேஷன் கடை ஊழியரை கழுத்தை அறுத்து மர்ம நபர்கள் கொல்ல முயன்றனர்.

திருச்சி

தொட்டியம்:

குளிக்க சென்றார்

தொட்டியம் அருகே உள்ள கோடியாம்பாளையம் கூத்தன் செட்டியார் தெருவை சேர்ந்தவர் ராமன்(வயது 50). இவர் அங்குள்ள ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் இவர் நேற்று தொட்டியம் அருகே உள்ள மணமேடு காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றார். அப்போது அவரை மர்ம நபர்கள் பிடித்து, 2 கைகளையும் பின்னால் மடக்கி, கத்தியால் ராமனின் கழுத்தை அறுத்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றனர்.

போலீசார் விசாரணை

இதனைக்கண்ட அக்கம், பக்கத்தினர் காயமடைந்த ராமனை மீட்டு தொட்டியம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story