பயணி தவறவிட்ட பையை காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்


பயணி தவறவிட்ட பையை காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்
x

பயணி தவறவிட்ட பையை ஆட்டோ டிரைவர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.

வேலூர்

பெங்களூரை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் பெங்களூரில் இருந்து காட்பாடிக்கு ரெயிலில் நேற்று வந்தார். பின்னர் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து சத்துவாச்சாரிக்கு ஆட்டோவில் பயணம் செய்தார். அப்போது அவரது பையை ஆட்டோவில் தவறவிட்டு விட்டார். அவர் தவறவிட்ட பையை ஆட்டோ டிரைவர் கார்த்திகேயன் காட்பாடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்பு ஹரிகிருஷ்ணனை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு போலீசார் வரவழைத்து அவரிடம் பையை ஒப்படைத்தனர்.

பயணி தவறவிட்ட பையை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரின் நேர்மையை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பாராட்டினர்.


Next Story