ஈரோடு -மேட்டூர் ரோட்டில் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் வணிகர்கள் நலச்சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம்


ஈரோடு -மேட்டூர் ரோட்டில் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும்  வணிகர்கள் நலச்சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானம்
x

தீர்மானம்

ஈரோடு

மேட்டூர் ரோடு வணிகர்கள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோடு முனிசிபல் காலனியில் உள்ள மருந்து விற்பனையாளர்கள் சங்க அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் தனபாலன், பொருளாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், 'பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு இடையூறாக மேட்டூர் ரோட்டில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரை போலீசார் அகற்றி விபத்துக்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை தொடர்பாக தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் ஆகியோரை சந்தித்து மனு அளிப்பது, வரும் காலங்களில் மேட்டூர் ரோட்டில் போக்குவரத்து மாற்றம், சாலை மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முன்பாக வணிகர்களை கலந்தாலோசித்து முடிவு செய்ய மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொள்வது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story