கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
கோவிலுக்குள் புகுந்து கரடி அட்டகாசம்
கோத்தகிரி
கோத்தகிரி அருகே எம்.கைகாட்டி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம மக்களுக்கு சொந்தமான முனீஸ்வரர் கோவில், கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் இருக்கிறது.
இந்தநிலையில் நேற்று காலை அவ்வழியாக பணிக்கு செல்பவர்கள், கோவிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததனர். அவர்கள் அருகே சென்று பார்த்தபோது, அங்கு வைத்திருந்த பொருட்கள் சிதறி கிடந்ததுடன், விளக்குகளில் ஊற்றி இருந்த எண்ணெயும் கீழே சிந்தி கிடந்தது. மேலும் அங்கு புகுந்த கரடி கோவிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, விளக்குகளில் இருந்த எண்ணெய்யை குடித்து அட்டகாசம் செய்தது தெரியவந்தது. உடனடியாக அவர்கள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறுகையில், எம்.கைகாட்டி கிராம பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. எனவே கரடிகள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளதால், கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.