கன்றுக்குட்டியை கடித்து குதறிய கரடி


கன்றுக்குட்டியை கடித்து குதறிய கரடி
x

வாணியம்பாடி அருகே கன்று குட்டியை கரடி கடித்து குதறியது. இதனால் கிராமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வடக்குப்பட்டு, சிகர்னப்பள்ளி, அம்பலூர், எக்லாசபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கரடி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. அந்த கரடியானது நெக்குந்தி கிராமத்துக்குள் புகுந்து நியூசிகர்னப்பள்ளி பகுதியில் சுற்றித்திரிந்துள்ளது.

அந்த பகுதியை சேர்ந்த மகாதேவன் தனது கன்றுக்குட்டியை வீட்டின் அருகே கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில் அங்கு சுற்றித்திரிந்த கரடி திடீரென கன்றுகுட்டி மீது பாய்ந்து கடித்து குதறியது. கன்றுகுட்டி கதறவே அங்கிருந்து கரடி தப்பிஓடியது.

இதனையறிந்த மகாதேவன் காயமடைந்த கன்றுகுட்டியை அம்பலூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு கன்று குட்டிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

எனவே கரடியை வனத்துறையினர் பிடித்து காட்டுப்பகுதியில் விட உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story