தாண்டிக்குடி அருகே பஸ்சை வழிமறித்த காட்டெருமை


தாண்டிக்குடி அருகே பஸ்சை வழிமறித்த காட்டெருமை
x
தினத்தந்தி 26 July 2023 2:30 AM IST (Updated: 26 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

தாண்டிக்குடி அருகே பஸ்சை காட்டெருமை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

கொடைக்கானல் கீழ்மலைப்பகுதிகளான பெரும்பாறை, தாண்டிக்குடி, தடியன்குடிசை, பெரியூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை, கடமான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் உள்ளன. சமீபகாலமாக உணவு, தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் குடியிருப்பு மற்றும் தோட்ட பகுதிகளுக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்தநிலையில் நேற்று தடியன்குடிசை-பெரும்பாறை இடையேயான மலைப்பாதையில் அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மலைப்பகுதியில் இருந்து இறங்கி வந்த காட்டெருமை ஒன்று பஸ்சை மறித்து நின்றது. இதனால் பஸ்சை டிரைவர் நிறுத்தினார். சுமார் 15 நிமிடங்கள் பஸ்சை மறித்த காட்டெருமை, பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள தோட்டத்துக்குள் சென்றது. இதற்கிடையே பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் காட்டெருமையை ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்தனர். அதன்பிறகு பஸ் புறப்பட்டு சென்றது.


Next Story