சாலையை சீரமைக்க வலியுறுத்தி நூதன போராட்டம் நடத்திய பா.ஜ.க. நிர்வாகி
கழுகுமலையில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பா.ஜ.க. நிர்வாகி நூதன போராட்டம் நடத்தினார்.
தூத்துக்குடி
கழுகுமலை:
கழுகுமலை வேதக்கோவில் தெருவில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. ஆனால் சாலை போடப்பட்ட சில நாட்களிலேயே கனரக வாகனங்களின் போக்குவரத்தால் சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக மாறியது. தற்போது கழுகுமலை பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதனால் இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் இந்த வளைவு பாதையில் பள்ளத்தில் தேங்கி கிடக்கும் தண்ணீரில் வழுக்கி விழுந்து அடிக்கடி விபத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சீரமைக்க பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பா.ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு ஒன்றிய தலைவர் சிவா, தேங்கி கிடக்கும் தண்ணீரில் மரக்கன்று வைத்து நூதன போராட்டம் நடத்தினார்.
Related Tags :
Next Story