போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்


போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பா.ம.க. சார்பில் தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எல்.இளவழகன் தலைமை தாங்கினார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் குமார், கிழக்கு மாவட்ட தலைவர் டி.கே.வெங்கடேசன், மேற்கு மாவட்ட தலைவர் கு.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ஜெகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரி என்.டி.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இடையே போதை பொருள் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பான்பராக், குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட போதை பொருட்கள் பெட்டி கடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவற்றில் சர்வ சாதாரணமாக விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இளைஞர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகி தவறான பாதைக்கு சென்று பல்வேறு தீய செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள், கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுகிறது. எனவே தமிழகத்தில் போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வேலூர் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் கோபி, துணைத்தலைவர் சம்பத் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

---


Next Story