ஒரே இடத்தில் 6 பேரின் உடல்கள் அடக்கம்


ஒரே இடத்தில் 6 பேரின் உடல்கள் அடக்கம்
x

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். தொடர்ந்து 6 பேரின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டன.

5 மகள்கள், ஒரு மகன்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் தாலுகா கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 40), தொழிலாளி. இவரது மனைவி வள்ளி (37). இவர்களுக்கு சௌந்தர்யா (20), திரிஷா (15), மோனிஷா (14), பூமிகா (9), தனுசு (4) என்ற 5 மகள்களும், சிவசக்தி (6) என்ற மகனும் உண்டு. இதில், சௌந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த வள்ளி கணவரை அழைத்துக்கொண்டு செங்கம் அருகே உள்ள ஒரு சாமியாரிடம் சென்று கழிப்பு கழித்து தாயத்து கட்டி உள்ளார்.

5 பேர் வெட்டிக்கொலை

இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு வள்ளி, திரிஷா, மோனிஷா, பூமிகா, தனுசு, சிவசக்தி ஆகியோரை பழனி வெட்டிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் பூமிகாவை தவிர மற்ற 5 பேரும் உயிரிழந்தனர்.

படுகாயத்துடன் உயிருக்கு போராடிய பூமிகா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 6 பேரின் பிரேத பரிசோதனை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்டு, நேற்று அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

அடக்கம்

பின்பு உடல்களை கீழ்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டின் அருகே வரிசையாக உடலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டனர். இறந்தவர்களின் உடலுக்கு எம்.எல்.ஏ.க்கள் சரவணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதைத் தொடர்ந்து இடுகாட்டில் 6 பேரின் உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன.

இந்த சம்பவத்தால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.


Next Story