ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கல்லூரி மாணவி பிணம்
ஒகேனக்கல் காவிரிஆற்றில் கல்லூரி மாணவி பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
பென்னாகரம்:
ஒகேனக்கல் காவிரிஆற்றில் கல்லூரி மாணவி பிணமாக மிதந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
கல்லூரி மாணவி
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மணல்திட்டு காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் காலை இளம் பெண்ணின் உடல் மிதந்து வந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மீனவர்கள், ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். விசாரணையில், பிணமாக மிதந்து வந்த பெண், தர்மபுரிநெல்லிநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகள் பிரியங்கா (வயது 21) என்பது தெரியவந்தது.
போலீஸ் விசாரணை
பிரியங்கா, தர்மபுரி அரசு கலை கல்லூரியில் ஆங்கிலம் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியே சென்றதாக தெரிகிறது. இதற்கிடையே பிரியங்கா காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவர், கொலை செய்யப்பட்டு உடல் ஆற்றில் வீசப்பட்டு இருக்குமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இருந்தாலும் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் பிரியங்கா சாவு குறித்து முடிவுக்கு வர முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும் கல்லூரி மாணவி பலியான சம்பவம் ஒகேனக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.