கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தை பிணம்
திண்டிவனம் அருகே கல்குவாரி குட்டையில் பச்சிளம் பெண் குழந்தை பிணம் கல்நெஞ்சம் படைத்த தாய்க்கு வலைவீச்சு
விழுப்புரம்
திண்டிவனம்
திண்டிவனம் அருகே உள்ள வட கொளப்பாக்கம் கிராமத்தில் உள்ள கல்குவாரி குட்டையில் பிறந்த சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையின் பிணம் மிதந்தது. இதுபற்றி கீழ் அருங்குணம் கிராம நிர்வாக அலுவலர் ராஜி கொடுத்த புகாரின் பேரில் பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குட்டையில் மிதந்த குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கள்ளத்தொடர்பில் பிறந்ததால் குழந்தையை அதன் தாய் குட்டையில் வீசிசென்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறாா்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story