கடலில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது


கடலில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது
x

நாகை துறைமுகத்தில் கருங்கல் தடுப்புச்சுவரில் படகு மோதி கடலில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகை துறைமுகத்தில் கருங்கல் தடுப்புச்சுவரில் படகு மோதி கடலில் மூழ்கி மாயமான சிறுவன் உடல் கரை ஒதுங்கியது.

தடுப்புச்சுவரில் படகு மோதியது

நாகை டாடா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான பைபர் படகில் சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் ராஜபாண்டியன்(வயது 17) ஆகியோர் நேற்று முன்தினம் நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். அப்போது துறைமுக நுழைவு வாயிலில் கடல் அரிப்பை தடுக்க கொட்டப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச்சுவர் மீது பைபர் படகு மோதியது. இதில் படகில் இருந்த சுப்பிரமணியன், ராஜபாண்டியன் இருவரும் கடலில் தூக்கி வீசப்பட்டனர்.

சிறுவன் உடல் கரை ஒதுங்கியது

இதை பார்த்த அருகில் வந்த படகில் இருந்தவர்கள் கடலில் தத்தளித்த சுப்பிரமணியனை மீட்டனர். ராஜபாண்டியன் கடலில் மூழ்கி மாயமானார். இதுகுறித்து தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து தேடினர். ஆனால் சிறுவன் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வேளாங்கண்ணி அருகே தெற்கு பொய்கைநல்லூர் கடற்கரையில் சிறுவன் ராஜபாண்டியன் உடல் கரை ஒதுங்கியது.

போலீசார் விசாரணை

இதை தொடா்ந்து சிறுவன் உடலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story