உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்த பெங்களூரு வாலிபர்
ஓசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உடலில் காயங்களுடன் பெங்களூரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்
ஓசூர் மூக்கண்டப்பள்ளி அருகே உடலில் காயங்களுடன் பெங்களூரு வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு வாலிபர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் மூக்கண்டப்பள்ளி அருகே உள்ளது தேசிங் நகர். இந்த பகுதியில் நேற்று முன்தினம் மாலை வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் விவேக் சர்மா ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அதில் இறந்து கிடந்தவரின் உடலில் இருந்த அடையாள அட்டை மூலம் விசாரணை நடத்தினர். அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாலட்சுமிபுரத்தைச் சேர்ந்த மஞ்சுநாதன் (வயது 29) என தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
மேலும் அவரை, மர்ம நபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்து உடலை கொண்டு வந்து போட்டு சென்று இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து போலீசார் மஞ்சுநாதனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக சிப்காட் போலீசார் சந்தேக மரணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெங்களூரு வாலிபர் உடலில் காயங்களுடன்பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.