சுற்றுலா பயணிகள் வருகையின்றி தாவரவியல் பூங்கா வெறிச்சோடியது


சுற்றுலா பயணிகள் வருகையின்றி தாவரவியல் பூங்கா வெறிச்சோடியது
x

ஊட்டியில் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி தாவரவியல் பூங்கா வெறிச்சோடியது.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் தொடர் மழை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இன்றி தாவரவியல் பூங்கா வெறிச்சோடியது.

தென்மேற்கு பருவமழை

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்யும். இந்த வருடம் தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக ஜூன் 2-வது வாரத்தில் தொடங்கியது. இதற்கிடையே கடந்த மாதம் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நீலகிரியில்

தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதால் கடும் குளிர் நிலவுகிறது. இதற்கு இடையே நாள் முழுவதும் பலத்த மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது.

வெறிச்சோடிய சுற்றுலா தளங்கள்

இதனால் ஆங்காங்கே சாலையோரம் மரங்கள் விழுகின்றன. இதேபோல் கடும் குளிர் நிலவுவதால், வேலைக்கு செல்பவர்கள் கம்பளி ஆடையுடன் செல்கின்றனர். மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து செல்கிறார்கள். தொடர் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஊட்டிக்கு உள்ளூர் மக்கள் வந்த நிலையில், தற்போது இங்கு நிலவும் அதிக குளிர் காரணமாக சமவெளி பகுதிக்கு படையெடுத்து செல்கின்றனர். மேலும் கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை மிகவும் குறைவாக உள்ளது.

வருகை குறைந்தது

இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா உள்பட சுற்றுலா தலங்கள் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. இதேபோல் படகு இல்லத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள படகுகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலும் மழை பெய்தால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. இதன்படி நேற்று முன்தினம் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவிற்கு 2,004 பேரும், கல்லாருக்கு 68 பேரும், காட்டேரி பூங்காவுக்கு 198 பேரும், ரோஜா பூங்காவுக்கு 775 என குறைவானவர்களே வந்தனர். இதனால் சுற்றுலா தலங்கள் களையிழந்து காணப்பட்டது.


Next Story