சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கரூர் பசுபதிபாளையம் அருணாச்சல நகர் பகுதியை சேர்ந்தவர் ரிஷாந்த்குமார் (வயது 17). இவன் அப்பகுதியில் உள்ள ஒரு சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தான். இவன் ஒரு பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளான். பின்னர் தன் காதலை அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளான். ஆனால் காதலை அந்த பெண் ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த ரிஷாந்த்குமார் சம்பவத்தன்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளான்.
இதைக்கண்ட அக்கம், பக்கத்தினர் அவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரிஷாந்த்குமார் பரிதாபமாக இறந்தான். இதையடுத்து உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.