சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை
சிறுவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.
சமயபுரம்:
மெக்கானிக்
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பூனாம்பாளையம் தெற்கு பள்ளம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவரது மகன் கிஷோர் (வயது 16). இவர் அப்பகுதியில் உள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் பட்டறை ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கிஷோர் தன்னுடைய தாயிடம் ஜல்லிக்கட்டு காளை வாங்க வேண்டும், அதற்கு பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர், கூலி வேலை செய்யும் தன்னிடம் எப்படி பணம் இருக்கும் என்று கேட்டுள்ளார். இதனால் ஜல்லிக்கட்டு காளை வாங்க முடியவில்லையே என்ற மனவிரக்தியில் இருந்த கிஷோர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது பற்றி தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.