வெந்நீர் கொட்டி சிறுவன் சாவு


வெந்நீர் கொட்டி சிறுவன் சாவு
x

வெந்நீர் கொட்டியதில் சிறுவன் பரிதாபமாக இறந்தான்.

சேலம்

பெத்தநாயக்கன்பாளையம்:

சேலம் மாவட்டம் கருமந்துறை கலகம்பாடி பகுதியை சேர்ந்த பிரபு- குஷ்பு தம்பதியின் மகன் கிஷாந்த்ஸ்ரீ. 2½ வயதான இந்த சிறுவன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அடுப்பில் வெந்நீர் கொதிக்க வைத்து இருந்தனர். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், அடுப்பில் இருந்த வெந்நீர் மீது விழுந்து விட்டான். இதில் உடல் வெந்து காயம் அடைந்த சிறுவனை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து கரியகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story