வாய்க்காலில் மூழ்கி சிறுவன் சாவு


வாய்க்காலில் மூழ்கி சிறுவன் சாவு
x
மாவட்ட செய்திகள்

திருச்சி, புத்தூர், ஆபீஸ் காலனி, தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அந்தோணி தினகரன் (43). இவர் கிரஷர் மணல் கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது நிறுவன உரிமையாளரின் இல்ல நிகழ்ச்சிக்கு மகன் ஜோஸ்வாவை (14) அழைத்து சென்றார். நிகழ்ச்சி முடிந்து திரும்பிய போது ஜோஸ்வா திருச்சி, கே.கே.நகர், சாத்தனூர் பகுதியில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலில் நண்பர்களுடன் குளிக்கச் செல்வதாக கூறியுள்ளார். அதனையடுத்து தினகரன் மகனை அங்கேயே விட்டுவிட்டு மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுவிட்டார்.

இந்தநிலையில் ஜோஸ்வா ஆழமான பகுதிக்கு சென்றதால் தண்ணீரில் மூழ்கினார். இதை யாரும் கவனிக்காததால் தண்ணீர் மூழ்கி ஜோஸ்வா இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் ேக.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Related Tags :
Next Story