ஊருணியில் மூழ்கி சிறுவன் சாவு
எஸ்.பி.பட்டினத்தில் ஊருணியில் மூழ்கி சிறுவன் இறந்தான்.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா எஸ்.பி.பட்டினத்தைச் சேர்ந்தவர் அமீர் சுல்தான். இவருடைய மகன் முகமது யூசுப் (வயது 17). இவருக்கு வலிப்பு நோய் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மாலை பள்ளிவாசலுக்கு சென்று விட்டு வருவதாக வீட்டில் கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு 10 மணிக்கு மேல் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் தேடி பார்த்த போது பள்ளிவாசல் அருகில் உள்ள ஊருணி கரையில் அவர் அணிந்திருந்த உடைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஊருணிக்குள் இறங்கி தேடிய போது முகமது யூசுப் பிணமாக மீட்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்த எஸ்.பி. பட்டினம் போலீசார் அவரது உடலை மீட்டு திருவாடானை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.
Related Tags :
Next Story