தந்தை ஓட்டிய லாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், சக்கரத்தில் சிக்கி பலி


தந்தை ஓட்டிய லாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், சக்கரத்தில் சிக்கி பலி
x

தந்தை ஓட்டிய லாரியில் தொங்கிக்கொண்டு வந்த சிறுவன் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியான விபரீத சம்பவம் நடந்துள்ளது.

விருதுநகர்

காரியாபட்டி,

தந்தை ஓட்டிய லாரியில் தொங்கிக்கொண்டு வந்த சிறுவன் தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி பலியான விபரீத சம்பவம் நடந்துள்ளது.

தந்தை ஓட்டிய லாரி

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள புல்வாய்க்கரை கிராமத்தை சேர்ந்தவர், முத்துப்பாண்டி (வயது 48). இவர் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் லாரி ஓட்டி வருகிறார். இவர் தற்போது காரியாபட்டியில் வசித்து வருகிறார். இவருடைய மகன் பால்ராஜ் (12). காரியாபட்டி அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தான்.இந்தநிலையில் முத்துப்பாண்டி செப்டிக் டேங்க் லாரியை ஓட்டி வந்தார். அப்போது அந்த லாரியின் பின்புறம் மகன் பால்ராஜ் தொங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த முத்துப்பாண்டி, மகனை சத்தம் போட்டுள்ளார்.

சக்கரத்தில் சிக்கி பலி

பின்னர், பால்ராஜ் இறங்கி விட்டதாக கருதி முத்துப்பாண்டி லாரியை நகர்த்தினார். அப்போது நிலை தடுமாறி பால்ராஜ் கீழே விழுந்து சக்கரத்தில் சிக்கியதாக தெரிகிறது. இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த விபரீத சம்பவம் குறித்து தகவல் அறிந்த காரியாபட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பால்ராஜீன் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து காரியாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை ஓட்டிய லாரியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை எற்படுத்தியது.


Related Tags :
Next Story