சிறுவனை தாக்கி செல்போன் பறிப்பு; 2 பேர் கைது


சிறுவனை தாக்கி செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
x

நெல்லையில் சிறுவனை தாக்கி செல்போன் பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ஸ்ரீராம் (வயது 17). இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் புதிய பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தென்காசி பாப்பான்குளத்தைச் சேர்ந்த பிரபாகர் (27), பொட்டல்புதூரைச் சேர்ந்த விக்னேஷ் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஸ்ரீராமை தாக்கி, அவரது செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகர், விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.


Next Story