சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு 2 ஆண்டு சிறை-போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
நெல்லையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது
திருநெல்வேலி
நெல்லையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது.
கூலி தொழிலாளி
திருப்பூர் மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரின் மகன் அசோக்குமார் (வயது 24). கூலி தொழிலாளி.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு நெல்லையை சேர்ந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு கடத்தி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
2 ஆண்டு சிறை
இந்த வழக்கு விசாரணை நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட அசோக்குமாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உஷா ஆஜரானார்.
Related Tags :
Next Story