சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்;நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்;நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

சிறுமி பலாத்காரம்

குமரி மாவட்டம் இரணியலை சேர்ந்தவர் தனேஷ் (வயது 22), யானை பாகன். இவருக்கு 15 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி துணி கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த சமயத்தில் தனேஷ் அவ்வப்போது சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு அவர் சிறுமியை செல்போனில் பேசி அழைத்து கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி இந்த சம்பவம் தொடர்பாக குளச்சல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூலியட் மற்றும் தலைமை ஏட்டு கவிதா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தனேசை கைது செய்தனர்.

20 ஆண்டு ஜெயில்

இது தொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை நீதிபதி சசிரேகா விசாரித்து வந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அப்போது தனேஷ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

சிறுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு அழைத்த குற்றத்திற்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும், கடத்தி சென்ற குற்றத்திற்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பில் நீதிபதி கூறியிருந்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்து குமாரி ஆஜராகி வாதாடினார்.


Next Story