வியாபாரியிடம் சுடிதார், சேலை பறித்த சிறுவன் கைது
பேட்டையில் வியாபாரியிடம் சுடிதார், சேலை பறித்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பேட்டை:
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பேஜல் (வயது 28). இவா் நெல்லையில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்து ஊர் ஊராக சேலை, சுடிதார் உள்ளிட்ட ஜவுளிகளை விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் பேட்டை ரொட்டிக்கடை பஸ் நிறுத்தம் அருகே வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு பேட்டை எம்.ஜி.ஆர். நகர் கருமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த முனீஸ் (25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வந்தனர். அவர்கள் உறவினரின் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க வேண்டி இருப்பதாக கூறி பேஜலை பேட்டை மலையாள மேடு ெரயில்வே கேட் பகுதிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து பேஜலை மிரட்டி 15 சுடிதார், 5 சேலைகள், செல்போன் ஆகியவற்றை 2 பேரும் பறித்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பேஜல் பேட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிந்து, சிறுவனை கைது செய்தார். முனீசை தேடி வருகிறார்.