ஆடு மேய்க்க சென்ற வாலிபர், ஏரியில் பிணமாக கிடந்தார்
வேதாரண்யம் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர், ஏரியில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அருகே ஆடு மேய்க்க சென்ற வாலிபர், ஏரியில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆடுமேய்க்க சென்றார்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நாகக்குடையான் ஊராட்சி நடுச்சாலை பகுதியைச் சோ்ந்தவர் ராஜேந்திரன. இவருடைய மகன் ராமகிருஷ்ணன் (வயது20). இவர் தனது வீட்டில் உள்ள ஆடுகளை அப்பகுதியில் உள்ள வயல்களில் மேய்ச்சலுக்கு கொண்டு செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று காலையில் ராமகிருஷ்ணன் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் மாலையில் ஆடுகள் மட்டும் வீடுகளுக்கு வந்துள்ளது. ராமகிருஷ்ணன் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும், அவர் கிடைக்கவில்லை.
ஏரியில் வாலிபர் பிணம்
இந்த நிலையில் பணடாரம் கோட்டகம் ஏரியில் ராமகிருஷ்ணன் உடல் கிடந்துள்ளது. இதை அங்கு இறால் பிடிக்க சென்ற மீனவர்கள் பார்த்து கரியாப்பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ராமகிருஷ்ணன் உடலை மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து கரியாப்பட்டினம போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமகிருஷ்ணன் ஏரியில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.