புதர்கள் மண்டி கிடக்கும் ராஜா மடம் கிளை வாய்க்கால்


புதர்கள் மண்டி கிடக்கும் ராஜா மடம் கிளை வாய்க்கால்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

புதர்கள் மண்டி கிடக்கும் ராஜா மடம் கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தஞ்சாவூர்

கரம்பயம்:

புதர்கள் மண்டி கிடக்கும் ராஜா மடம் கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ராஜா மடம் கிளை வாய்க்கால்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வீரக்குறிச்சி ஊராட்சியில் ராஜா மடம் கிளை வாய்க்கால் மூலம் 700 ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்த பாசன வாய்க்காலில் மேட்டூர் அணை திறந்தாலும் தண்ணீர் வராமல் தடுத்து நிறுத்தக்கூடிய அளவில் செடி, கொடிகளும் புதர்களும் மண்டி கிடக்கிறது. இன்னும் 2 நாட்களில் மேட்டூர் அணை திறக்கப்பட்டதும் ராஜா மடம் கிளை வாய்க்காலில் பாளமுத்தி ஊராட்சியில் தொடங்கி நறுவழிக்கொல்லை வழியாக வீரகுறிச்சி ஊராட்சியில் வந்து சூராங்காடு குளம் நிரம்பி, சூரப்பள்ளம் குளம், வீரக்குறிச்சி குளம், ஆகிய குளங்களில் நீர் நிரம்பி அதற்கு மேலும் தொடர்ந்து வருகிற தண்ணீரால் சஞ்சாய நகர், ஆலடிக்கு முளை, சூராங்காடு, வீரக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கும் மேற்பட்ட விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது.

தூர்வார கோரிக்கை

இந்த கிளை வாய்க்கால் தூர்வாரப்படாமலும் செடி கொடிகள் மண்டி கிடப்பதாலும் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. தற்பொழுது ஆழ்துளை கிணறு வைத்திருப்பவர்கள் விவசாயம் செய்ய முடிகிறது. ஆற்று நீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள் விவசாயம் செய்வது கேள்விக்குறியாக உள்ளது.

எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் வீரக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பலன் அடையும் வகையில் வீரக்குறிச்சியில் உள்ள ராஜா மடம் கிளை வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story