பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பாலம்


பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பாலம்
x
தினத்தந்தி 6 Sept 2023 12:15 AM IST (Updated: 6 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் அருகே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவாரூர்


திருவாரூர் அருகே பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள பாலத்தை சீரமைக்க வேண்டும் என மக்கள் அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழமையான பாலம்

திருவாரூரில் இருந்து பழவனக்குடி கிராமத்துக்கு செல்லும் வழியில் உள்ள பாலம் மிகவும் பழமையான பாலம் ஆகும். இந்த பாலத்தை மொச்சக்குடி, எழுவேலி, கூத்தம்பாடி, இருவேலி ஆகிய கிராமங்களை சோ்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாலம் தற்போது மிகவும் பழுதடைந்து இடிந்து வருகிறது. பாலத்தின் தூண்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாக இருந்து வருகிறது.

சீரமைக்க கோரிக்கை

பழவனக்குடி உள்பட 5 கிராம மக்கள் திருவாருரூக்கு இந்த பாலத்தின் வழியாக சென்று வருகிறார்கள். இந்த பாலத்தின் வழியாக எந்த நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படும். எனவே இடியும் நிலையில் உள்ள இந்த பாலத்தால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்க, இந்த பாலத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story