குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்

திருவாரூர்

மன்னார்குடியில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் வலியுறுத்தினர்.

மன்னார்குடி ரெயில் நிலையம்

மன்னார்குடி பாமணி செல்லும் சாலை அருகில் மன்னார்குடி ெரயில் நிலையம் அமைந்துள்ளது. மன்னார்குடி ெரயில் நிலையத்திலிருந்து சென்னை, திருப்பதி, கோவை, ஜோத்பூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு ெரயில்கள் சென்று வருகின்றன. இந்த ெரயில்களில் பயணம் செய்வதற்கு மன்னார்குடி மட்டுமல்லாது அருகில் உள்ள நகரங்கள், கிராமங்களில் இருந்து ஏராளமான ெரயில் பயணிகள் தினமும் காலையிலும், மாலையிலும் வந்து செல்கின்றனர்.

குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா?

தற்போது பாமணி செல்லும் சாலையிலிருந்து ெரயில்வே நிலையத்திற்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த சாலை வழியாக ெரயில் நிலையத்திற்கு வாகனத்தில் செல்லும் பயணிகள் அடிக்கடி கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைத்து தர ேவண்டும் என்று ெரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story