தீக்காயம் அடைந்த டீக்கடைக்காரர் பரிதாப சாவு


தீக்காயம் அடைந்த டீக்கடைக்காரர் பரிதாப சாவு
x

வாணாபாடியில் கியாஸ் கசிந்து தீக்காயம் அடைந்த டீக்கடைக்காரர் இறந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை அருகே உள்ள வாணாபாடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 62).

இவர் ராணிப்பேட்டை செல்லும்சாலையில் தனியார் பள்ளி அருகே டீ கடை நடத்தி வந்தார். கடந்த 10-ந் தேதி இவர் தனது டீக்கடையில் கியாஸ் சிலிண்டரில் இருந்து கியாஸ் கசிந்ததை கவனிக்காமல் அடுப்பை பற்ற வைத்தார்.

அப்போது தீப்பிடித்ததில் செல்வராஜ் மற்றும் கடையில் இருந்த 5 ேபர் தீக்காயம் அடைந்தனர்.

இவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டீக்கடைக்காரர் செல்வராஜ் (வயது 65) சிகிச்சை முடிந்து வீட்டிற்கு கொண்டு வரப்பட்டார். இந்த நிலையில் அவர் இறந்து விட்டார்.

இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story