சாலை தடுப்புச்சுவரில் மோதிய பஸ்


சாலை தடுப்புச்சுவரில் மோதிய பஸ்
x
தினத்தந்தி 29 July 2023 1:30 AM IST (Updated: 29 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது பஸ் மோதி விபத்துகுள்ளானது.

திண்டுக்கல்

கொடைக்கானல் மேல்மலை கிராமமான பூம்பாறையில் இருந்து தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை கொடைக்கானல் பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சை அய்யம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 43) என்பவர் ஓட்டினார். பஸ்சில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். கொடைக்கானலில், அப்சர்வேட்டரி சாலையில் இருந்து நகரை நோக்கி வந்த பஸ், முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்திச்செல்ல முயன்றது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி விபத்துகுள்ளானது.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த பூம்பாறையை சேர்ந்த மூர்த்தி (70), அப்சர்வேட்டரியை சேர்ந்த புஷ்பம், செல்லபுரத்தை சேர்ந்த அனிதா (24), புதுபுத்தூரை சேர்ந்த நிஷாந்தி (36) மற்றும் டிரைவர் சதீஷ்குமார் ஆகிய 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் அப்சர்வேட்டரி பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பஸ் அங்கிருந்து அகற்றப்பட்டு, போக்குவரத்து மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து கொடைக்கானல் போலீசார் விசாரித்தனர். பிரேக் பிடிக்காததால் பஸ், தடுப்புச்சுவர் மீது மோதியதாக அதன் டிரைவர் தெரிவித்தார்.


Next Story