திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது
வந்தவாசி அருேக திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
வந்தவாசி
வந்தவாசி அருேக திருமண கோஷ்டியினர் சென்ற பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
திருமணம்
ெசங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் தாலுகா பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்த ெவங்கடேசன் என்பவருக்கு இன்று காலை அச்சரப்பாக்கத்தில் திருமணம் நடந்தது. இதையொட்டி நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கையில் இருந்து மணமகளின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தனியார் பஸ்சில் அச்சரப்பாக்கத்துக்கு சென்றனர்.
வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர்கள் நேற்று மீண்டும் ஓரிக்கைக்கு பஸ்சில் திரும்பினர்.
அச்சரப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வழியாக பஸ் காஞ்சீபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
தீப்பிடித்து எரிந்தது
இந்த பஸ்சை அரக்கோணத்தைச் சேர்ந்த லோகநாதன் (வயது 45) என்பவர் ஓட்டினார். வந்தவாசி- காஞ்சீபுரம் சாலையில், வீரம்பாக்கம் கூட்டுச்சாலை அருகே இரவு 10 மணியளவில் செல்லும்போது திடீரென பஸ்சின் டயர் வெடித்தது.
இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடி சிறுபாலத்தின் மீது மோதியது. அப்போது டீசல் டேங்க் பாலத்தில் உரசியதால் பஸ்சில் திடீரென தீப்பற்றியது.
இதில் தீ மளமளவென பஸ் முழுவதும் பரவியதால், பயணிகள் அலறியடித்து கூச்சலிட்டனர். பஸ்சில் இருந்து இறங்க முண்டியடித்தனர். பஸ் மூடப்பட்ட கண்ணாடிகளை கொண்டதால் பயணிகள் செய்வதறியாது தவித்தனர்.
கண்ணாடியை உடைத்து
அப்போது சென்னை நோக்கி சென்ற லாரி டிரைவர் இதை பார்த்து லாரியை நிறுத்தினார். உடனடியாக லாரியில் இருந்த இரும்பு ராடால் பஸ்சின் கண்ணாடியை உடைத்து பயணிகள் வெளியேற வழி ஏற்படுத்தினார்.
உடனடியாக பயணிகள் அனைவரும் வேகமாக பஸ்சில் இருந்து இறங்கினர். அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் இல்லை. இதில் பஸ் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது.
இந்த சம்பவத்தில் காஞ்சிபுரம் தாலுகா ஓரிக்கையைச் சேர்ந்த மோகன் (வயது 32), ராமமூர்த்தி (40) ஆகியோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தகவலறிந்த வந்தவாசி தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.