இலுப்ப நகரம் அருகே பஸ் நிறுத்தம் திறந்த வெளி டாஸ்மாக் பாரானது. இதனால் ெபாதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இலுப்ப நகரம் அருகே பஸ் நிறுத்தம் திறந்த வெளி டாஸ்மாக் பாரானது. இதனால் ெபாதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
குடிமங்கலம்
இலுப்ப நகரம் அருகே பஸ் நிறுத்தம் திறந்த வெளி டாஸ்மாக் பாரானது. இதனால் ெபாதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பஸ் நிறுத்தம்
குடிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்டது இலுப்பநகரம் ஊராட்சி. பெதப்பம் பட்டியில் இருந்து இலுப்ப நகரம் செல்லும் ரோட்டில் விவசாய பகுதிகள் நிறைந்துள்ள இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது. பெதப்பம்பட்டியில் இருந்து இலுப்பநகரத்திற்கு தினமும் ஏராளமாக இரு சக்கர வாகனங்கள் மற்றும் பஸ்கள் சென்று வருகின்றன. இங்கு இலுப்பநகரம் அருகே பயணிகள் வசதிக்காக பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் நிறுத்தத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானவர்கள் நின்று பஸ் ஏறி செல்வார்கள். ஆனால் அந்த பஸ் நிறுத்தம் பழுதடைந்து காணப்படுகிறது. பஸ் நிறுத்தம் பின் பகுதி ஜன்னல் உடைந்து காணப்படுகிறது.
உடைந்த மது பாட்டில்கள்
பஸ் நிறுத்தத்தின் உட்பகுதி முழுவதும் டாஸ்மார்க் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பஸ் நிறுத்தத்தில் நிற்பதற்கு அஞ்சும் நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.