மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் 31-ந்தேதி வரை நடைபெறும்-மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி தகவல்


மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் 31-ந்தேதி வரை நடைபெறும்-மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி தகவல்
x

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் 31-ந்தேதி வரை நடைபெறும் என்று சேலம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி தெரிவித்து உள்ளார்.

சேலம்

சேலம் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை, விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் முகாம் மின் வாரிய அலுவலகங்களில் கடந்த 28-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாம் வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை உள்பட அனைத்து நாட்களிலும் தினமும் காலை 10.30 மணியில் இருந்து மாலை 5.15 மணி வரை முகாம் நடைபெறும். இந்த சிறப்பு முகாமை மின்நுகர்வோர் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


Next Story