கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்


கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும்
x

கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பத்தூர்

ஆம்பூர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள ரபீக் நகரில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது. கடந்த 2 மாதங்களாக பணிகள் நடைபெறவில்லை. மசூதி பக்கத்தில் கால்வாய் பணி பாதியில் நிற்பதால் அதன் வழியாக செல்பவர்கள் கால்வாயில் விழும் நிலை ஏற்பட்டுள்ளது. உடனடியாக கால்வாய் பணியை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story