கார் மோதி, மீட்பு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது


கார் மோதி, மீட்பு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சூளகிரி அருகே கார் மோதி, மீட்பு வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

கிருஷ்ணகிரி

சூளகிரி

கிருஷ்ணகிாியில் இருந்து சூளகிரி நோக்கி நேற்று மாலை விபத்து மீட்பு வேன் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இந்த வேனை டிரைவர் தினேஷ்குமார் ஓட்டிச்சென்றார். இதில் ஊழியர்கள் சக்திவேல், மாதேஷ் ஆகியோர் உடன் சென்றனர். சூளகிரி சின்னார் அருகே சென்ற போது, பின்னால் வந்த கார் மீட்பு வேன் மீது மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேன் டிரைவர் உள்பட 3 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திய காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதில் பயணம் செய்தவர்கள் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் விரைந்து சென்று கார் மற்றும் மீட்பு வேனை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story