வீட்டு சுற்றுச்சுவரில் மோதிய கார்


வீட்டு சுற்றுச்சுவரில் மோதிய கார்
x

திங்கள்சந்தை அருகே வீட்டு சுற்றுச்சுவரில் மோதிய கார் முதியவர் படுகாயம்

கன்னியாகுமரி

திங்கள்சந்தை,

திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் தெற்குதெருவை சேர்ந்தவர் சியாம் தம்புஜி (வயது87). இவர் சம்வத்தன்று நள்ளிரவு நெய்யூர்தெற்கு தெரு பகுதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டு இருந்தார். ஒரு வீட்டின் முன்பு சென்றபோது வேகமாக வந்த ஒரு கார் சியாம் தம்புஜி மீது மோதிவிட்டு வீட்டின் சுற்றுச்சுவர் மீது மோதி நின்றது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த சியாம் தம்புஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் வீட்டின் சுற்றுச்சுவரும் சேதமடைந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story