மோட்டார் சைக்கிள் மீது மோதிய காா், வாய்க்காலில் கவிழ்ந்தது


மோட்டார் சைக்கிள் மீது மோதிய காா், வாய்க்காலில் கவிழ்ந்தது
x

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி:

திருக்காட்டுப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி வாய்க்காலில் கார் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

காரில் கும்பகோணம் பயணம்

கோவை மாவட்டம் வெள்ளலூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது58). இவர் தனது உறவினர்களுடன் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த திருமணத்துக்காக காரில் வந்தார். திருமணம் முடிந்ததும் நேற்று இவர்கள் காரில் கோயம்புத்தூர் புறப்பட்டனர். காரை லோகநாதன் ஓட்டினார். திருவையாறை அடுத்த கூத்தூர் பகுதியில் சென்றபோது கார் எதிர்பாராதவிதமாக எதிரில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி அருகில் உள்ள வாய்க்காலில் கவிழ்ந்தது.

4 பேர் படுகாயம்

இந்த விபத்தில் காரில் இருந்த லோகநாதனின் உறவினர்கள் கோவை வெள்ளலூரை சேர்ந்த மணிவண்ணன் (62), அவருடைய மனைவி ஹேமா (60), லோகநாதன் மனைவி அருணா (55) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த திருவையாறு அருகே உள்ள புனவாசலை சேர்ந்த தனபால் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

காரை ஓட்டி வந்த லோகநாதன் சிறு காயத்துடன் தப்பினார். கார் வாய்க்காலில் கவிழ்ந்ததும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து காருக்குள் இருந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story